மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான திட்டமுன்மொழிவு தயாரிக்கும் கூட்டம்


எஸ். சதீஸ் - 

எதிர்வரும் வருடத்தின் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான திட்டமுன்மொழிவு தொடர்பான கிராமிய மட்டக் கூட்டம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நரிப்புல் தோட்டம், மகிழவட்டவான், ஆயித்தியமலை நெடியமடு போன்ற கிராமங்களில்  இன்று இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டங்களில் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் இணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் அபிவிருத்தி இணைப்பாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர், 
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் கிராம மட்ட அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளாக உட்கட்டமைப்பு 12 இலட்சம், வாழ்வாதார அபிவிருத்தி 12 இலட்சம், பேண்தகு அபிவிருத்தி 3 இலட்சம், சமுதாய அபிவிருத்திக்கு 3 இலட்சம் என 30 இலட்சம் ரூபா பெறுமதியில் ஒவ்வெரு கிரங்களுக்கும் திட்ட முன்மொழிவுகள் தெரிவு செய்யப்பட்டது.






Post a Comment

0 Comments