மனைவியை தினமும் குளிக்க சொன்னால் சண்டை போடுகிறார் - விவாகரத்து கோரும் கணவர்!
தினம்தோறும் என் மனைவியை குளிக்கச் சொன்னால் வீட்டில் இருவருக்கும் சண்டை வருகிறது. எனக்கு என் மனைவியுடன் வாழ விருப்பம் கிடையாது,
மனைவி தினமும் குளிப்பதில்லை என காரணம் கூறி கணவர் முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்துள்ள விநோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவருக்கும், குவார்ஸி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த இஸ்லாமிய தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிப்பதில்லை, குளிக்கச்சொன்னாலே சண்டை வருகிறது என்ற காரணத்தை கூறி அந்த நபர் தனது மனைவியை முத்தலாக் கூறி பிரிந்திருக்கிறார்.
அந்த நபரின் மனைவி இச்சம்பவம் குறித்து மகளிர் பாதுகாப்பு பிரிவுக்கு எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை தந்துள்ளார். அதன்படி நான் தினமும் குளிக்கவில்லை என எனது கணவர் விவாகரத்து கேட்கிறார். ஆனால் நான் இந்த திருமணத்தை முறிக்க விரும்பவில்லை, என் கணவருடன் சேர்ந்து வாழ வையுங்கள் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

0 Comments