பயணத் தடையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

கொவிட் பயணத் தடையால் அன்றாடம்  வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு  சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் சனிக்கிழமை (18.09.2021) வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது வாகரை பிரதேசத்திலுள்ள ஆண்டான்குளம் மற்றும் தோணி தாண்டமடு ஆகிய கிராமங்கிளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 134 குடும்பங்களுக்கு சிங்கப்பூரில் வாழ்கின்ற யோகராஜா குடும்பத்தினரின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு 93ல் உயர்கல்வி கற்ற மாணவர்களால்  (93'நண்பர்கள்)  இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. 

புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து Friends of '93 Batch - Batticaloa எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றனர். 












Post a Comment

0 Comments