நகை, பணம் கொள்ளை ! சந்தேக நபர் சிசிரிவியில் சிக்கினார்



தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் உள்ள வீடொன்றின் மேல்மாடியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 18 பவுண் நகையும்,65 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அருகில் உள்ள சிசிரிவி கமராவின் உதவியுடன் சந்தேக நபரை அடையாளம் கண்டு, அடுத்தநாள் ஞாயிற்று கிழமை காலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதையடுத்து, கொள்ளையிடப்பட்ட நகை, பணம் என்பன உரிய நபரிடம் இருந்து மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆலையடிவேம்பு வாச்சிகுடா பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments