( வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பொண் ஒருவரையும் மதுபானப் போத்தல்களையும் வெள்ளிக்கிழமை (17.09.2021) ஆயிததியமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயித்தியமலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக, பொலிஸ் உத்தியோகத்தர்களான, வண்டார (50639), குணதாச (56395), நெவில்(16479), திசநாயக்க (18608) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழவினரே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆயித்தியமலை 9ம் கொளனி எனும் இடத்தில், பெண் ஒருவர் தனது வீட்டில் கால்போத்தல் அளவு கொண்ட 57 போத்தல்களை தன் வசம் வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்டதன்பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாராயப் போததல்களும் மீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தெரிவித்தார்.
கைது செய்யப்பட பெண்ணையும் சாராயப் போத்தல்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments