COVID உயிரிழப்பு 8000-ஐ கடந்தது



நேற்று (26) உறுதி செய்யப்பட்ட கொரோனா மரணங்களுடன் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8000-ஐ கடந்துள்ளது.


நாட்டில் ஒரே நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்புகளாக 209 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை COVID-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட 209 கொரோனா மரணங்களில் 163 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகூடிய எண்ணிக்கையிலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று வரை 93,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments