அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன், கடந்த 24
மணித்தியாலத்தில் கொரோனாவினால் 10
பேர் உயிரிழந்துள்ள்ளனர் எனவும் இத்துடன் மாவட்டத்தில் உயிரிழப்பு 211 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில்
274
பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய
சுகாதார
சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்
நா. மயூரன் தெரிவித்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் நா. மயூரன் இன்று சனிக்கிழமை
(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி
பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி, ஏறாவூர்,
செங்கலடி, வெல்லாவெளி, வாழைச்சேனை,
வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார
வைத்திய அதிகாரிகள் பிரிவகளில் தலா
ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர் கடந்த 24
மணித்தியாலத்தில்
உயிரிழந்துள்ளதையடுத்து, மாவட்டத்தில்
மரணமடைந்தோர் எண்ணிக்கை 211 பேராக
அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இருந்து எழுமாறாக எடுக்கப்பட்ட
3 பேரின் பிசிஆர் பரிசோதனையின் மாதிரிகள்
கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து
இதில் இருவருக்கு டெல்டா
வைரஸ்சும், ஒருவருக்கு அல்பாவைரஸ்சும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று
பரவியிருக்கின்றதுடன், ஒருவாரத்தில் 1982
கொரோனா தொற்றாளர்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்தம் 300
தொற்றாளர்கள் கண்டறியப்படுவதுடன் 5க்கும்
மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே
வரவேண்டாம் அப்போது தான் தொற்றை
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என
தெரிவித்தார்.

0 Comments