ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதி, குடாகம பிரதேசத்தில், நேற்று (29) இரவு லொறியொன்று குடைசாயந்து விபத்துக்கு உள்ளானதில் கொள்கலனின் சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவையிலிருந்து தலாவக்கலை பூண்டுலோயா நோக்கி, 20 தொன் விறகுகளைக் கொண்டுச் சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த லொறியில் லொறியின் சாரதி, லொறியின் உதவியாளர் மற்றும் ஒருவர் பயணித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments