உரிய காரணமின்றி வீதியில் நடமாடிய 63 பேருக்கு வழக்குப் பதிவு



நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில்  வீதிகளில் நடமாடியவர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

152 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.


இதன் போது உரிய காரணமின்றி வீதிகளில் நடமாடிய 63 பேர் மீது  பொலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் . 

இவர்கள் பயணித்த துவிசக்கர வண்டி , மோட்டார் சைக்கிள் , ஆட்டோ என்பன தற்போது பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன 

பொலிஸார் எச்சரித்து விட்டிருக்கலாம் அல்லது எங்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு எங்களது வாகனங்களை தந்திருக்கலாம் . வயல் , சதொச , பார்மசி போன்ற தேவைகளுக்கு என சென்றவர்களும் இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அபராதம் விதிப்பார்கள் இந்த நெருக்கடியில் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் போது அபராத தொகை கட்ட வேண்டும் என  வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் கவலையுடன் தெரிவித்திருந்தனர்.  

இவர்களது வழக்கு அடுத்த மாதமே நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரியவருகின்றது




Post a Comment

0 Comments