காரைதீவு சகா -
காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு மீன் சந்தையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மீன் வியாபாரிகளுக்கு இன்று (19) கொவிட் - 19 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க, காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ் பெறுபேற்றைத் தந்ததாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இதேவேளை, காரைதீவில் மதுபானசாலை அமைந்துள்ள பிரதான வீதிகளிலும் இத்தகைய அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments