யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தாவரவியலில் பேராசிரியராகவும் இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன், தாவரவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான இ.கபிலன், இரசாயனவியலில் பேராசிரியரும் தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும் விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி சிவமதி சிவச்சந்திரன், பயிரியலில் பேராசிரியரும் பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவருமான கலாநிதி க.விக்னரூபன் ஆகியோரை பௌதிகவியலில் பேராசிரியராக பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று (சனிக்கிழமை), யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், மதிப்பீட்டுக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனத்துக்கான தேவைப்பாடுகளை நிறைவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த மதிப்பீடுகளின் படியும் தெரிவுக் குழுவின் சிபார்சின் அடிப்படையிலும் நான்கு பேரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பேரவை ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - ஆதவன்
0 Comments