ஐந்து துப்பாக்கி, 22 தோட்டா, கைக்குண்டுடன் ஒருவர் கைது



இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபர் ஒருவரை, கேகாலை பொலிஸார் இன்று (29) காலை கைதுசெய்துள்ளனர்.

கேகாலை ரம்புக்கனை பிரதேசத்திலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments