கொரோனா ஊரடங்கு காரணமாக அரியாலை மேற்கு, நல்லூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் இயல்பு சூழல் பாதிக்கப்பட்டு உள்ள தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு வார இறுதியில் தலா 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டன.
அரியாலை ஸ்ரீ வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் ஊடாக இந்த அற பணியை சுவிற்சலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற புலம்பெயர் வாழ் இத்தி மரத்தாள் புத்திரர்கள் திருப்பணி சபை முன்னெடுத்தது.
ஆலய நிர்வாகத்தின் சார்பாக தலைவர் மு. ஜெஸ்லிபாலா, செயலாளர் க. சந்திரராஜா, உப செயலாளர் கா. ஜெயராசாசிங்கம் மற்றும் போசகர் மா. மனோகரநாதன் ஆகியோரும், திருப்பணிச் சபை சார்பாக கனகசபை கோடீஸ்வரன், வி. கே. குமணன், நடேசபிள்ளை பிரதீபன் ஆகியோரும் வீடு வீடாக சென்று உணவுப் பொதிகளை கையளித்தனர்.
இதன்போது பொது சுகாதார விதிகள் முறையாக கைக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது


0 Comments