சுபீட்சத்தின் நோக்கி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டு. பழுகாமத்தில் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி


சதீஸ்


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி  வேலைத் திட்டத்தின் கீழ்   விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை மேற்கொள்வதற்கான  தௌிவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவில் இன்று இடம்பெற்றது.

பழுகாமம் பிரதேசத்தின் விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன்.சகாப்தனின் ஏற்பாட்டில்  கழுமுந்தன்வௌியில்  இடம்பெற்ற இந் நிகழ்வில்  வலயம் தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் ரீ.மேகராசா மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள், கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர்களால்  இங்கு வருகைதந்த விவசாயிகளுக்கு 
சேதனப் பசளை  உற்பத்தி தொடர்பில் விளக்கத்தினையும்,  செய்முறைப் பயிற்சியினை வழங்கினார்

Post a Comment

0 Comments