ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினி எனும் சிறுமியின் மரணத்திற்கு நியாயமான தீர்வு வேண்டும்இ சிறுமியின் மரணத்திற்கு காணரமாக இருந்தவர்களுக்கு அதி உச்சபட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிலுப்புத் தொகுதியினரின் ஏற்பட்டில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழi(30) இடம்பெற்றது.


இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படடிருப்புத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள்இ ஆதரவாளர்கள்இ பொதுமக்கள் இளைஞர் யுவதிகள்இ என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.


 


சிறுவர்களைச் சிதைக்காதீர்கள், ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் , கடுமையாக்கு, கடுமையாக்கு சட்டங்களை கடுமையாக்கு, அதிகாரச் சேட்டைக்கு அப்பாவிச் சிறுமியா?  உங்களது பிள்ளை பிள்ளை! ஏழைகளின் பிள்ளை?


 இ அவளின் படுகொலைக்கு நீதி வேண்டும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்காமலிருப்பது முறையா?,  அரசே விசாரணையைத் துரித்தப்படுத்து, 

உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பட்டிருப்பு சந்தியிலிருந்து களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை வரை சென்றனர்.

 பின்னர் பொதுச் சந்தையின் முன்னால் நின்று கொண்டு கோசங்களை எழுப்பி விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.







Post a Comment

0 Comments