வறுமை

இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டம் என்பதில் மட்டக்களப்பு மாவட்டமும்  முன்னிலையில் காணப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்,  இந்த நிலை பல வருடங்களாக நீடித்துவருவதனை நாம் அறியமாலில்லை.


மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மனித வளமும் மனித வலுவும் ஏராளமாகவே உள்ளது, அதேபோன்று பல இயற்கை வளமும் உண்டு. இந்த விடயங்களை   யாவரும் மூடிவைக்கவில்லை அனைவரும் அறிந்த விடயமே, இம் மாவட்டத்தில் படுவான்கரை எனும் பெருநிலப் பிரதேசத்தையும் எழுவான்கரை எனப்படும் நகர் பகுதியையும் நீர் நிறைந்த ஆறு பிரித்துக் காட்டுகின்றது.


 விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, கூலித் தொழில்கள் போன்ற தொழில்களைச் செய்தே பெரும்லும் படுவான்கரை மக்கள் தமது அன்றாட வாழ்கையை நடாத்திச் செல்கின்றனர். இதேபோன்று அரச தொழில்கள் தவிர்ந்த வியாபாரம், விவசாயம், நாட்கூலி போன்ற தொழில்களை நகர் புறங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் தெய்து தமது வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.


இந்த வறுமை நிலையை போக்கக் பங்களிப்புச் செய்யக்கூடிய வளங்கள் இங்கு என்னுழி    ரைலவ2பசனயண உள்ளது என்பதை சற்று  நோக்குவோமானால், இம் மாவட்டத்தில் சுமார் 40 வீதத்திற்கும் அதிகமானோர் எந்தவெரு தொழிலுமே செய்யாமல் உள்ளனர். இந்த மனித வளம் இம் மாவட்டத்தில் தாராளமாகவே உள்ளது என்றுதான் கூறவேண்டும். இவர்களில் அதிகமானோர் கல்விப் பொது தராதர சாதாரணதரம் கற்று சித்தியடையாமலும், உயர்தரம் கற்றவர்களும் அதிகமாக உள்ளனர்.


மாவட்டத்தின் வறுமைநிலையை போக்க வறுமை நீக்கிகளும், அபிவிருத்தியாளர்களும் என்ன செய்தனர்?

கடந்த பத்து ஆண்டுகளில் என்ன நடந்தது என்ன நடக்கவில்லை என்பதை சற்று நோக்குவோமானால்,    கடந்த 2008 மே மாதம் 10ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்   மகிந்த ராஜபக்ச தலைமையிலான  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு கிழக்கு மாகாண முதல் முதலமைச்சராக 16 மே 2008 இல் பதவியேற்றார்.

இக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் இவ்வாறானதொருவறுமை நிலையில்தான் காணப்பட்டது, கிழக்கில் மிகவும் அதிகாரம் பொருந்திய நிருவாகக் கட்டமைப்பும் அக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவின் மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கையும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நிறையவே பெற்றிருந்தார் என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்த விடயமே. 

இக் காலத்தில், மட்டக்களப்பின் வறுமை நிலையை போக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும், ஆடுத்த அடுத்த ஆண்டுகளில் வறுமை நிலையை படிப்படியாக போக்கலாம் எனவும் இதற்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றது என்றெல்லாம் பரவலாக பலராலும் மேடை நிகழ்வுகளில் கூறப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த காலமது அந்த காலகட்டத்தில் அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபா செலவில் வீதிகளும் பாலங்களும் அமைக்கப்பட்டது, அதற்கு ஏற்றாற்போல் வௌிநாட்டு நிதி நிறுவனங்களும் பல மில்லியன் ரூபா பணத்தினை அள்ளி வழங்கியது எண்ணிப் பார்க்காத அளவில் அபிவிருத்து சுறுசுறுப்பாக நடைபெற்றது. இவ்வாறு நாடுபூராவும் பிரமாண்ட அபிவிருத்திகள் நடைபெற்றது என்றுகூடச் சொல்லலாம். இதனிடையே தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டது. இவ்வாறு காலங்கள் வேகமாக ஓடியது.

2012இல் கிழக்கு மாகாண முதல்  முதலமைச்சர் பதவி நிறைவுக்கு வந்தது, அப்போதும் மக்கள் அதே நிலையில் காணப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டம்  வறுமை நிலையில் முன்நோக்கியே உள்ளது. சிறந்த சந்தர்ப்பம் ஒன்று நழுவிப்போய்விட்டது என்றுகூட இதனை சொல்லலாம்.


இரண்டாவது சந்தர்ப்பம், நல்லாட்சி அரசு மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சியமைந்தது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பூரண ஆதரவை இறுதிவரை வழங்கிவந்தது. 

இக் காலகட்டத்திலும்  மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் முன்னோக்கித்தான் காணப்பட்கின்றது. நல்லாட்சி மூலம் வாழ்வாதார உதவிகள், உட்கட்டமைப்பு அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றது, குறிப்பாக கம்பரலிய எனும் திட்டத்தினூடாகவும்  பல மில்லியன் தொகை நிதி செலவு செய்தனர். இக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சியை கொண்டு செல்வதில் பெரும் பங்கை வகித்தது இதன்மூலம் சில விடயங்களை சாதித்தோம் என கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்னும் பல விடயங்களை இவர்கள் செய்திருக்கலாம் செய்யத் தவறிவிட்டனர்.  

இவ்வாறிருக்க திடீரென நல்லாட்சி முடிவுக்கு வந்தது, ஆனால் இப்போதும் மட்டக்களப்பு மக்களின் வறுமை நிலையை  முன் நிலையிலே உள்ளது.


தேவை அறிந்து செயற்படவேண்டும் என்பதற்கிணங்க இங்கு இரு  அதிகார ஆட்சிக் காலங்களிலும் வீதி அமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற உட்கட்டமைப்பு வேலைகளையும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பொருட்கள் உபகரணங்கள் வழங்குதல் போன்றவை மட்டும்தான் அபிவிருத்தி என்று எண்ணுமளவிற்கு இவர்கள் தமது ஆட்சியையும், அதிகாரங்களையும் மட்டக்களப்பு மண்ணில் நடாத்திவிட்டனர்.

இம் மாவட்டத்தில் சாதாரணமாக பத்து குடும்பங்களில் எட்டுப்பேர் எதுவித வேலைக்கும் செல்லாமல் வீட்டுக்கு பாரமாக இருக்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு படுவான்கரை பிரதேசத்திலும் எழுவான்கரை (நகர்) பிரதேசத்திலும்  பாரிய தொழில் பேட்டைகளை அமைத்து அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கினால் அந்த குடும்பங்களின் வருமானம் தானாகவே அதிகரிக்கும், குடும்ப வருமானம் அதிகரிக்கும்போது மாவட்டத்தின் வருமானம் உயர்வடையும் இதன்மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை போக்க முடியும்.  இவ்வாறான திட்ட நடவடிக்கைகளை கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த தமிழ் பிரதிநிதிகள் வாய்வழியாக கதைத்திருந்தாலும் அது செயலில் அமையவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.


காலம் கடந்து சென்றுவிட்டது இனி முடியாது என சொல்ல முடியாது மீண்டும் எமது மாவட்ட மக்களின் குடும்ப வருமானத்தை உயர்த்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, இப்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் இம் மாவட்டத்தில் அதிகாரத்துடன் உள்ளனர். இவர்கள் முதலாவது எமது மாவட்டத்தில் தொழில் அற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்காவது முதற்கட்டமாக தொழில்வாய்ப்பை வழங்கும் பொருட்டு திட்டங்களை வகுக்கவேண்டும்.  இவ்வாறு வகுக்கும் திட்டங்கள் செயற்படும் நிலைக்கு வருமானால் வறுமை நிலை போக்கப்படும் இதன்மூலம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பலரது கண்ணீருக்கு விடிவு கிடைக்கும் என்பது நிதர்சனம்.










– 18 செப்டம்பர் 2012


































Post a Comment

0 Comments