ஆயித்தியமலையில் சேதனப்பசளை தயாரிக்கும் பயிற்சி



மட்டக்களப்பு மத்தி விவசாய விரிவாக்கல் பிரிவிலுள்ள ஆயித்தியமலை , நெல்லூரில் சேதனப்பசளை தயாரிக்கும் பயிற்சி இன்று செவ்வாய்க்கிழமை (27.07.2021ம் திகதி) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளரின்  ஆலேசனைக்கு அமைவாக ஆயித்தியமலை பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவின் விவசாய போதனாசிரியர் A.W.M. சிபான் தலைமையில்  ஆயித்தியமலை , நெல்லூர்  கிராமத்தில் இக் கூட்டெரு சேதனப்பசளை தயாரிப்பு தொடர்பான விழிப்புணர்வும் செய்முறைப்  பயிற்சியும் நடை பெற்றது.

இதன்போது விவசாய போதனாசிரியர்  A.W.M. சிபான் அவர்களால் கூட்டெரு (சேதனப்பசள) தயாரித்தர் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.

இதன்போது விவசாயிகள் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.





 


Post a Comment

0 Comments