தற்போதைய COVID 19 காரணமாக மாணவர்களின கல்வி நிலையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக வீட்டிலிருந்து மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கேற்ற வகையில் பட்டிருப்பு வலய கேட்போர் கூடத்தில் வைத்து இன்று (31.07.2021) வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களால் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந. புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலுக்கும், ஆலோசனைக்கும் அமைவாக தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ந.நேசகஜேந்திரன் அவர்களினால் 'தமிழமுதம்' செயல்நூல் தொகுக்கப்பட்டிருந்தது. இச் செயலட்டை மூலம் எதிர்வரும் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இதனைக் கற்று இத் தொகுப்பிலுள்ள பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் சிறந்த பரீட்சை முடிவுகளைப் பெறமுடியும்

0 Comments