நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,94,333 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா நோயாளர்கள் 957 பேர் இன்று குணமடைந்தனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,66,665 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்தது.
மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. 26 ஆண்களும் 17 பெண்களும் இதில் அடங்குகின்றனர்.
இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4002 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

0 Comments