​கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.


 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது. அங்கு இன்று 6ம் திகதி வரை 10,038 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா மூன்றாம் அலையின்போது 6,173 பேர் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 3,527 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,978 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 1,669 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 1,864 பேரும் கொரேனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 166 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மூன்றாம் அலையின் அதிகூடுதலான மரணங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 97 மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 18 மரணங்களும் கல்முனை பிராந்தியத்தில் 17 மரணங்களும் பதிவாகியுள்ளன.

கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments