மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா 3ம் அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நிவாரண உதவிகள் அரசாங்கத்துடன் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட இருதயபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கு (ஒரு குடும்பத்துக்கு தலா சுமார் 1300 ருபா பெறுமதியான பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
தமிழர் முன்னேற்ற கழக அமைப்பினர் அனுசரனையுடன் சில வர்த்தகர்களின் உதவியுடன் இவ் நிவாரண பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது. மட்டு மாநகர சபை பிரிவிட்குள் தெரிவு செய்யப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இவ் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.


0 Comments