மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்தில் பலி!



கிளிநொச்சியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


கரடி போக்கு சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் 5 ஆம் வாய்க்கால் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் வீழந்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments