மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா! ஒரே நாளில் 05 பேர் மரணம்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று (06) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


கொரோனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் 84 வயதுடைய பெண் ஒருவர், ஏறாவூர் பிரதேசத்தில் 58 ,67 வயதுடைய பெண் இருவரும் , வாழைச்சேனையில் 36 வயதுடைய கர்ப்பிணி ஒருவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும்

இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக
களுவாஞ்சிகுடி- 08 

காத்தான்குடி - 18 

ஓட்டமாவடி - 16 

கோறளைப்பற்று மத்தி -10 

செங்கலடி -03

ஏறாவூர் -01

பட்டிப்பளை -07

வவுணதீவு -10 

வெல்லவெளி - 02

கிரான் -06 பேர் 

உட்பட 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 32 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments