கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புளியந்தீவு சமூர்த்தி வங்கி பிரிவில் 5000 ரூபா வழங்கும் நிகழ்வு!



 (வரதன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று அரசாங்கத்தினால் கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4ம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 13 கிராம சேவகபிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 9097 சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு புளியந்தீவு சமூர்த்தி வங்கியில் அதன் முகாமையாளர் கே.சத்தியசீலன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலளார் எஸ்.வாசுதேவனால் இன்று பிற்பகல் புளியந்தீவுவில் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு சமூர்த்தி நிவாரணம் பெறுவோர் குறைந்த வருமானம் பெறுவோர் அங்கவீனர்கள் வயோதிபர்கள் சிறுநீரக நோயாளர்கள் 100 வயதை தாண்டியவர்கள் இப் பணம் ஏற்கனவே கிடைக்காமல் முறைப்பாடு செய்தோர் என 13 கிராம சேவகபிரிவிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தில் இன்று வழங்கிவைக்கப்பட்டது. 

புளியந்தீவு சமூர்த்தி வங்கியின் உயர்அதிகாரிகள் பலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இதில் கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments