மங்கள மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் - சாணக்கியன் எம்.பி அழைப்பு


அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விட தற்போதையப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் தொடர்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனாலேயே 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவால், 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலி​லேயே சாணக்கியன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


 மஹிந்த ராஜபக்ஷ இல்லை என்றால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்கிற ஒரு கட்சி இருந்திருக்காதெனவும் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறமையானத் தலைவரெனவும் ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் போல மக்கள் தொடர்பு அவருக்குக் குறைவெனவும், மக்களுடனானத் தொடர்பாடாலை வளர்த்துக்கொண்டால் நாட்டின் மிகச்சிறந்தத் தலைவராக ரணிலால் இருக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments