மட்டக்களப்பில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தல் அமுல்!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாவட்டச்செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.


இதன்படி பாலமீன்மடு, பூநொச்சிமுனை, கல்லடி, வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்ப்பட்டதையடுத்தே இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.









Post a Comment

0 Comments