சட்டவிரோதமான முறையில் வேலங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி முதிரை மரக்குற்றிகளை மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தினையும் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இன்று (19) காலை பம்பைமடுவில் கடமையில் நின்ற பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்திச் செல்லப்டடுள்ளமை தெரியவந்தது.
சம்பவத்தில் மரங்களை ஏற்றி வந்த வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களைக் கடத்தியதற்குப் பயன்பட்ட கன்ரர் வாகனத்தையும், 13மரக்குற்றிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments