நாட்டில் ஏற்பட்ட காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத் திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது காற்று மிகவும் அதிகமாக வீசிக்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி பகுதியில் பாரிய மரமொன்று விழுந்து வீடொன்று சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலை அன்புவழிபுரம் தில்லையம்பலம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் காற்று வேகமாக வீசிக்கொண்இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது

0 Comments