யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!

 


நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடு, இன்றைய தினம் (25) தளர்த்தப்பட்ட நிலையில், யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடியதை அவதானிக்க முடிந்தது.


இதன் காரணமாக, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் சனநெரிசலையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் முகமாக, இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டள்ளனர்.


 

Post a Comment

0 Comments