விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67..‌ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்! இவர் தானா?



நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இச்சூழலில் இயக்குனர் ரத்னகுமாருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியானது.


Post a Comment

0 Comments