40 இலெட்சம் ரூபா பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்தியசாலைக்கு வழக்கி வைப்பு.



40 இலெட்சம் ரூபா பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைத்தியசாலைக்கு வழக்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு 40 இலெட்சம் ரூபா பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை(18) அன்பழிப்புச் செய்யப்பட்டன.        

அவுஸ்ரேலியன் எயிட் மெடிக்கல் பவுண்டேன் எனும் அமைப்பு இதனை வழங்கி வைத்துள்ளதுஇதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன்அதன் பிரதிப் பணிப்பாளர் நா.மயூரன்ஆகியோர் கலந்து கொண்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் .புவனேந்திரநாதன் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித் தமிழ் தொதியாக அமைந்துள்ள பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ளது களுவாஞ்சிகுடி ஆதரவைத்தியசாலையாகும்இவ்வைத்தியாசலையே அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பாரிய சுகாதார சேவையை வழங்கி வருகின்றதுஇவ்வைத்தியசாலைக்கு இந்த 40 இலெட்சம் ரூபா பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை 

அவுஸ்ரேலியன் எயிட் மெடிக்கல் பவுண்டேன் வழங்கி வைத்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.








Post a Comment

0 Comments