குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு



முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இன்று (08) இளம் குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு மீட்கப்பட்டவர் பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த 36 அகவையுடைய யோகராசா றாஜினி என்ற இளம் குடும்ப பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

கடந்த 04.01.2022 ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருமணமாகி இரண்டு வயது வந்த பிள்ளைகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

22 அகவை ஆணும் 16 அகவை பெண்பிள்ளைகளும் உள்ள நிலையில் முதற்கணவர் தட்டையர்மலை முத்துஜயன்கட்டில் வசித்துவந்துள்ளார். தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

Post a Comment

0 Comments