திருகோணமலையில் கொட்டும் மழையில் வீதிக்கு இறங்கிய அதிபர், ஆசிரியர்கள் : கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நடைபவணி



 திருகோணமலையில் அதிபர் ஆசிரியர்கள் கொட்டும் மழையில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் நடைபவணி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.


இன்று (09) திருகோணமலை சிவன் கோவில் முன்றலிலிருந்து நடைபவணியாக திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையம் வரை தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

நாடளாவிய ரீதியில் கடந்த ஆறு மாதங்களாக ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கி மழை,வெயில் என பாராமல் தமது சம்பள உயர்வினை கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

தயவு செய்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச அவர்களும் கேட்டுக்கொள்வது ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் எமது நியாயமான சம்பள கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான தீர்வினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது நடை பவனியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments