பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான 16 நாட்கள் செயல்வாதம் - காவியா அமைப்பினால் முன்னெடுப்பு

காவியா பெண்கள் அமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான 16 நாட்கள் செயல்வாதம் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு நகரில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமானது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வீ ஏபக்ட் (EU & we Effect ) நிறுவனங்களின் அனுசரணையில் காவியா சுய பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் இச் செயற்பாடுத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.


இந்நிகழ்வில் காவியா சுய பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முச்சக்கர வண்டி சங்க தலைவர்,  பிரதிநிதிகள், அரச தனியார் அமைப்புக்களின் அலுவலர்கள், காவியா அமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதன்போது முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன் இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.














Post a Comment

0 Comments