தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதோடு, விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - மு.மா உறுபினர் இரா. துரைரெத்தினம்

கொரோனா  தொற்றால் வறுமையில் பாதிக்கப்படும் மக்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதோடு, விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - மு.மா உறுபினர் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத் தலைவருமான இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (திங்கள்கிழமை 17.05.2021 திகதி ) ஊடகங்களுக்கு கடுத்து தெரிவிக்கையிலே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர்  தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்துத் தடை, தனிமைப்படுத்தல் போன்றவற்றில் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் இக் கொடுப்பனவு பற்றாக்குறையாக உள்ளதோடு, காலதாமதமாக கிடைக்கக் கூடிய சூழல் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. 


 


இவ் விடயங்களை நிவர்த்தி செய்வதற்கு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள். சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டாலும் அரசாங்கம், நிதி அமைச்சிடமிருந்து கொடுப்பனவுக்கான அனுமதி கிடைப்பதில் காலதாமதம் உள்ளது. இதனால்   உலர் உணவு பொதிகள் வழங்குவதில் சில பின்னடைவுகள் உள்ளதாதவும் அறியமுடிகின்றது.


 


இது இவ்வாறிருக்க வழங்கப்படும் உலர் உணவை ஒருதடவை பத்தாயிரம் ரூபா பொறுமதியில் உலர் உணவையும், இரண்டாவது தடவையும் பத்தாயிரம் ரூபாவுக்கான உலர் உணவையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


ஆகவே அரசாங்கம் , நிதி அமைச்சிடமிருந்து விரைவாக உலர் உணவுக்கான அனுமதி வழங்கப்படுவதுடன் இந்நிதி பத்தாயிரம் வீதம் இரு தடவ கள் வழங்கப்படவும் வேண்டும் என 

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.



Post a Comment

0 Comments